TN Rain Alert: சென்னையில் அதிகாலையில் கொட்டிய கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - இன்றைய வானிலை நிலவரம்

TN Rain Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டியது.

Continues below advertisement

TN Rain Alert: வடதமிழகத்த்ன் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னையில் கனமழை:

கடந்த இரண்டு தினங்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகாலையில் கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம், பெரியார் பாதை, சூளைமேடு, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை மற்றும் ஆயிரம் விளக்கு போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அதிகாலையில் வேளைக்கு செல்வோர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

வடதமிழகத்த்ன் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.24: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், -இடி, மின்னலுடன் மின் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024 மற்றும் 23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுஇகள்:

 20.10.2024: அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.19.2024: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2024: அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.10.2024: மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கும் முதல் விவே மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Continues below advertisement