TN Rain Alert: தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட 7 மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதாவது மே மாதம் 5-ஆம் தேதி மட்டும் காஞ்சிபுரத்தில் இரண்டு மணி நேரத்தில் 12 செ.மீ மழை பொழிந்ததால் சாலைகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டது.
அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை
இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்படும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் இன்று காலை தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்தது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
06.05.2023: குமரிக்கடல் , மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு - தென் மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
07.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 07.05.2023 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.