21 மாவட்டங்கள்:


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம், கோவை, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வானிலை நிலவரம்:


11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


12.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


11.08.2023 மற்றும் 12.08.2023: தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


13.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 36.8 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவானது.


அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை பகல் நேரங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெயில் வாட்டிய நிலையில், நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, எம்.ஆர்.சி நகர், ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்தது.