TN weather Cyclone Update: (28-11-2025): தமிழ்நாட்டில் நாளை காவிரி படுகையை ஒட்டி உள்ள 5 மாவட்டங்களுக்கு, கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது ”தித்வா” புயல்:
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E அருகே மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஹம்பாந்தோட்டை (இலங்கை) க்கு கிழக்கே சுமார் 170 கி.மீ. மற்றும் மட்டக்களப்பிலிருந்து (இலங்கை) 210 கி.மீ. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை வழியாக கிட்டத்தட்ட வடக்கு-வடமேற்காக நகர்ந்து, இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு, அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்காக தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதால், இதற்கு தித்வா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்:
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.29 & 30ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு:
வரும் 29ம் தேதியன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அன்று கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியாலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் நவம்பர் 30ம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.