தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 






இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்று (டிசம்பர் 3) காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்” ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ‘ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்’ பகுதிகளில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.