வேலூர் ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகளை வெறும் ஐந்தே நாட்களில்  காவல்துறையின் பத்திராமாக மீட்டனர். கடந்த 15ம் தேதி, வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 15  கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. 


கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்தனர். 


 



மீட்கப்பட்ட தங்க நகைகள்


 


சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 


Unnao Road Accident: உன்னாவ் இளம்பெண் விபத்து வழக்கு; குல்தீப் சிங் செங்கார் விடுதலை


நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது. இந்நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. சிங்கம் முகம் போன்ற மாஸ்க் அணிந்துகொண்டு கடைக்குள்ளே வரும் நபர் சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்பிரே அடிக்கிறார். அது மற்றொரு கேமராவில் பதிவாகியது.




இதனைத் தொடர்ந்து, கொள்ளையில் தொடர்புடைய பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பத்திமாக மீட்டனர்.   



மேலும் படிக்க : ஆபாசப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கல்லூரி மாணவர்.. கூலிப்படை வைத்து கொன்று புதைத்த 10ம் வகுப்பு மாணவிகள்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண