தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவரது தலைமையின் கீழ் அமைச்சர்களும் செயல்பட்டுவருகின்றனர். மொத்தம் 34 அமைச்சர்கள் இருக்கின்றனர்.
அமைச்சர்களின் செயல்பாடு மீது இதுவரை மக்களுக்கு பெரிதாக வருத்தம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என சென்னை தலைமை செயலக வட்டாரம் தெரிவிக்கிறது. காரணம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டுமென்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் தற்கொலை… ரூ.7000 கோடி கடன்.... ஒரே ஆண்டில் ‛கஃபே காஃபி டே’வை மீட்ட மாளவிகா ஹெக்டே!
அதற்கான முன்னேற்பாடுதான் ஜூனியர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிலிருந்து சீனியர் அமைச்சர் கே.என்.நேருவரை உதயநிதியை முன்மொழிய ஆரம்பித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே உதயநிதி அமைச்சராக்கப்பட்டால் யாருடைய அமைச்சர் பதவி காலி ஆகும் என்பது குறித்தான விவாதமும் நடந்துவருகிறது. அதேசமயம் தனக்கு அமைச்சர் பதவி மீது விருப்பமில்லை என உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். இருந்தாலும் அது வெறும் சம்பிரதாய பேச்சு எனவே கருதப்படுகிறது.
இந்நிலையில் மூன்று அமைச்சர்களின் நிர்வாகம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, உழவர் நல துறை எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பணிடம் இருந்த விமான போக்குவரத்து தொழில்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமும் தொழிலாளர் நல துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கமிஷன் கிடைப்பதால் பொங்கல் பரிசு பொருட்கள் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு