தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து  வருகின்றனர்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 மணிக்கு தொடங்கியுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 626 ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 10,329 கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கெனவே 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


Local Body Polls Second Phase LIVE: உள்ளாட்சி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடக்கம்!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டது.




தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவசைலம் ஊராட்சி 3வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொது வாக்குச்சாவடி அமைத்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் 2வது வார்டு மக்கள் 3வது வார்டில் வாக்கு செலுத்தினார்கள். இரண்டாவது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வான நிலையில் அந்த வார்டை சேர்ந்த 45 பேர் 3வது வார்டுக்கு வாக்களித்தனர்.


விடுபட்ட 789 பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு


தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 106 கிராம ஊராட்சி தலைவர், 630 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண