கரூரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் குளம்போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பழைய பை-பாஸ் சாலையில் குளம்போல தேங்கிய மழைநீரில் திருப்பூரில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் சென்சாரில் மழைநீர் ஏரியதன் காரணமாக கோளாறு ஏற்பட்டது. அதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து பழைய பை-பாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குறுக்கு சாலைகள் வழியாக வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர்.
இந்த நிலையில் கரூர் சின்னாண்டாங்கோவில் சந்திப்பில் காவல்துறையினர் ஜீப் வாகனத்தின் மூலம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஜீப் வாகனத்தின் மீது மோதி இழுத்து சென்று சாலை நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி நின்றது. அப்போது சாலையை கடந்து வந்த பெண்மணி சாலை தடுப்புக்கும், பேருந்துக்கும் இடையே சிக்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
.
இந்த விபத்தில் தாந்தோணிமலை, சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த சம்பூர்ணம் என்ற பெண்மணிக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் அந்த பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் பழுதடைந்த அரசு பேருந்தை பொதுமக்கள் அனைவரும் பின்பக்கமாக தள்ளிச் சென்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண்மணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...