தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கிலும், ஒமிக்ரான் வைரசுக்கு எதிராகவும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, வேப்பேரியில் இன்று கொரோனா வைரசுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கான சித்த மருத்துவ மையத்தை திறந்து வைத்தார்.


பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ ஏ சின்டமிக் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இல்லங்களிலே இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரண்டு தடுப்பூசியும் போட்டுக்கொண்டு எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் இல்லங்களிலே இருப்பதுதான் சரியான ஒன்று. அவர்களும் மருத்துவமனை நோக்கி வரும்போது, ஏற்கனவே டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கே இருப்பார்கள் என்பதால் நோயின் தன்மை கூடுதலாகும் என்பதால் ஒமிக்ரான் பாதிப்பிற்குள்ளாபவர்கள குறிப்பாக இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வீடுகளிலே இருப்பது நல்லது.




5 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இரண்டு பரிசோதனை செய்து அதில் நெகடிவ் என்று வந்தால், அவர்கள் வெளி நடமாட்டத்திற்கு கூட தடையில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறை ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஏ சின்டமிக் அறிகுறி உள்ளவர்கள் சென்னையில் உள்ள 22 சோதனை மையங்களில் பரிசோதனை செய்து கொண்டு வீடுகளிலே இருக்கலாம். இவர்களை கண்காணிப்பதற்கு மண்டலத்திற்கு ஒரு மருத்துவ குழு திறக்கப்படுகிறது. 15 மண்டலங்களுக்கும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.




இரண்டு தடுப்பூசி போடாமல் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் அளித்து அவர்கள் வீடுகளிலே வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர் குழு கண்காணிக்க உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே சிறுவர்களுக்கான தடுப்பூசி பணியை முதல்வரே நேரில் வந்து தொடங்கி வைத்தார். முதல் நாளே 10 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயாராக உள்ளனர். அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது தொடங்கப்படும் போதே ஓராண்டுக்கு தற்காலிக அமைப்பு என்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கப்படும்போது 1820 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். எந்த க்ளினிக்கிற்கும் செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஏதாவது ஒரு தற்காலிக கட்டிடத்தில் திறந்து வைத்தார்கள். இப்போதும் அவர்களுக்கு மார்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர்.




சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இதன் தாக்கம் பெருகிக்கொண்டிருக்கிறது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலே தங்கவைக்கப்பட்டு, அவர்களின் ஆக்சிஜன் அளவு செய்யும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் மருத்துவ ஆலோசனை வழங்கும் பணி இன்றே தொடங்கப்பட்டுள்ளது.


அம்மா மினி கிளினிக் மூலம் சிகிச்சை அளிக்கவில்லை. இந்த அம்மா மினி கிளினிக் மூலம் யார்? யார்? சிகிச்சை பெற்றார்கள் என்பது குறித்த பட்டியல் இன்னும் தரப்படவில்லை. அம்மா மினி கிளினிக் என்பது முடிந்துவிட்டது. அது ஒரு தற்காலிக அமைப்பு. அதில் உள்ள மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில், அனைத்து மருத்துவர்களும் கொரோனா பணி நீட்டிப்பு செய்துள்ளனர். 1820 மருத்துவர்களும் எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ”


இவ்வாறு அவர் கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண