தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

TN Assembly: : நீட் தேர்வு விலக்கு: நடப்புக் கூட்டத் தொடரில் சட்ட முன் வடிவு -முதல்வர் அறிவிப்பு

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது.  இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

இதற்கிடையே, வரும் கல்வியாண்டில், இரண்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவு வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னதாக துவங்கி வைத்தார். 

Employment Renewal Online: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் ஒரு நிமிடம் போதும்!