சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,
‛‛முறைப்படி அனுமதி பெற்று தான் விசாரணை நடக்கிறது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதை போல் அதிமுகவினர் நடந்து கொண்டனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்கப் போவதில்லை. எனவே பயப்படத் தேவையில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாமல் எங்கள் மீது குறி வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். கோடநாடு விவகாரமும் தேர்தல் அறிக்கையில் கூறியது தான். இதுமட்டுமல்ல இன்னும் பல இருக்கிறது என முதல்வர் பேசினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு மேஜையை தட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக சட்டமன்றத்தில் முதல்வர்-அதிமுகவினர் இடையே நடந்த வாக்குதத்திற்கு காரணம் இதோ...
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கோடநாடு விவகாரம் தொடர்பான மற்றபிற செய்திகள் இதோ...