சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.இந்தநிலையில், சாதி பாகுபடற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், 


தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்ட மன்ற பேரவை விதிகளுள் விதி எண் 110-இன் கீழ் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார். 


“தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக  வழங்கப்படும்”.


2. மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை மாவட்டம் நீங்கலாக) சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்  பயன்பாட்டிலுள்ள சிற்றூர்களின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு ஊக்கத் தொகையாக முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 3 சிற்றூர்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 சிற்றூர்களுக்கு  தலா  ரூ.10,00,000/- வீதம் மொத்தம்  ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்கிட ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை (நிலை) எண்.93, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(நிஎ2(2)த்துறை,  நாள். 23.11.2021 –இல்   ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக, முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டசபையில் திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குகிறது. சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம் என்றும், சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும். இப்பரிசுத் தொகை, சாதி வேறுபாடற்ற மயானங்கள் திட்டம் கொண்ட கிராமத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


மேலும், நாம் அனைவரும் திருவள்ளுவர் கூறியதுபோல, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒப்பற்ற தத்துவத்தின் அடிப்படியில் நாம் அனைவரும் இணைந்து வாழ அனைவரும் வாழவேண்டும். ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண