TN Govt: ஜல்லி மற்று எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை, இன்று முதல் யூனிட்டிற்கு ரூ.1000 உயர்த்தப்படுகிறது.
யூனிட்டுக்கு ரூ.1000 விலை உயர்வு:
நீர்வளத் துறை மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில், கல்குவாரி மற்றும் கிரஷர் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள், “கனிம வரி உயர்வுக்கு ஏற்ப பொருட்கள் விலையை ஏற்றி கொள்ளலாம் என்று அமைச்சரும், அதிகாரிகளும் அனுமதி கொடுத்து உள்ளனர். எனவே செவ்வாய்க்கிழமை முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்' என தெரிவித்தனர். கட்டுமானத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டிற்கு ரூ.1000 உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியால், சொந்த வீடு எனும் கனவு இறுதி வரை கனவாகவே இருந்துவிடுமொ என வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு அறிக்கை:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரை கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது கல்குவாரிகளுக்கு வழங்கப்படும் உரிமங்களுக்கான கால நீட்டிப்பு மற்றும் குவாரிகள் Amalgamation தொடர்பான அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன, SEIAA தொடர்பான முக்கிய கோரிக்கைகளான நிலத்தடி நீர்மட்டம் வரை குவாரி செய்வது, மொத்த உற்பத்தி அளவில் 50ரூ வரை ஓராண்டில் உச்ச உற்பத்தி செய்வது, இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று தேவையில்லை போன்றவற்றை பரிசீலித்து முடிவு செய்திட SEIAA உறுதி செய்துள்ளது என்றும் இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பாக சங்கத்தினர் அரசிற்க்கு நன்றி தெரிவித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.