ஐந்து முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை ஆட்சியர் ப்ரதிக் தயாள் ஐஏஎஸ் அரசு நிதித்துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ் ஈரோடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணை ஆட்சியராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., சென்னை பெருநகர மாநகராட்சியின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ பிரிவின் சிறப்பு அலுவலராக இருக்கும் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்.,க்கு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ளார்.
அநீதியை அகற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்.