தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளியே கொண்டு செல்லவும், தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்வதற்கும் ஏராளமான கனரக வாகனங்கள் வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சென்னை - வேலூர் 6 வழி சாலை ( Chennai Vellore New six way highway )
இதே நிலைமை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை இருக்கும் மாவட்டங்களிலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் சாலை வசதிகளை படிப்படியாக மேம்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலிருந்து வேலூருக்கு புதிய ஆறு சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது.
சென்னையில் எங்கிருந்து இந்த சாலை தொடங்கும்?
சென்னை வழிபட்ட சாலையானது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருந்து, இந்த சாலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரகடத்தின் தொழில் பூங்கா, செய்யாறு சிப்காட் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 38 ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையின் வெளிவட்டச் சாலையில் இருந்த இந்த சாலை புறப்பட உள்ளதால், எளிதாக காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு, சரக்கு போக்குவரத்து கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக அமையும்.
இந்த சாலை சுமார் 135 கிலோமீட்டர் முதல் 142 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக அமைய உள்ளது. இந்த சாலையில் ஒரகடம் முதல் செய்யார் சிப்காட் வரை சுமார் 68 கிலோமீட்டர் தூரத்திற்கு முதற்கட்டமாக அமையும். குறிப்பாக இந்த சாலை, வேலூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூரை நோக்கியும், ஆற்காடு-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சந்திப்பு வழியாக, இந்த சாலை செல்லும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சாலை - ஆற்காடு நேரடி பயணம்
ஜிஎஸ்டி சாலையில் இருந்து, நேரடியாக செய்யாறு சிப்காட் வழியாக ஆற்காடுக்கு பயணிக்க இந்த சாலை பெரிதும் உதவும். இதற்கான சாத்திய கூறுகளை தயாரிப்பதற்காகவும் செய்யார் தொழில் தட்டத்தை வேலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-38 வரை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வது குறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.