பள்ளி சென்று வீடு திரும்பாத சிறுமி

Continues below advertisement

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பள்ளியில் 9 - ம் வகுப்பு படிக்கும் மாணவி , கடந்த 2 - ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பவில்லை. விசாரணையில் சிறுமி செய்த தவறுக்காக தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளம் மூலம் பழக்கமான பிராட்வேயைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சஞ்சய் ( வயது 20 ) என்பவருடன் மூன்று நாட்களாக ஊர் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. விசாரித்த போலீசார் சிறுமியை கடத்திய வழக்கில் சஞ்சயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுனர் கைது

Continues below advertisement

சென்னை திருநின்றவூர் அடுத்த கொட்டாமேடு சோதனை சாவடியில் நேற்று முன் தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் , அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 1.100 கிலோ கஞ்சா இருந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த விநாயகர்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் ( வயது 25 ) என்ற ஆட்டோ ஒட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதே போல் , செங்குன்றம் , செட்டிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசாரின் வாகன சோதனையின் போது , இருசக்கர வாகனத்தில் போதை பொருள் கடத்திய நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த முகமதுபயாஸ் ( வயது 22 ) என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களான பான்பராக் , ஹான்ஸ்களை பறிமுதல் அ. அவரது கூட்டாளி ராமு ( வயது 38 ) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

லிப்ட் கேட்டு ஏறி , தனியார் வங்கி மேலாளருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல்

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் அஜய் ( வயது 24 ) தனியார் வங்கி மேலாளர். ஒத்தக்கடை தெரு வழியாக 2ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இவரிடம் , அயனாவரம் வரை செல்ல உதவி கேட்டு இருவர் ஏறினர். ஓட்டேரி அருகே கத்தியை காட்டி பணம் கேட்டு அஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை விசாரித்த போலீசார் ஓட்டேரியைச் பகுதியை சேர்ந்த சூர்யா ( வயது 26 ) நந்தகுமார் ( வயது 28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இரு தரப்பினரிடையே வாக்குவாதம் - தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர்வர்கள் அர்ஜுனன் மற்றும் லட்சுமணன். கடந்த 4ம் தேதி சக பணியாளர்களுடன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் கிடந்த குப்பையை பிளாஸ்டிக் பைகளில் பைகளில் சேகரித்து, அருகில் உள்ள தனியார் துணிக்கடையின் வாசலில் வைத்துள்ளார். அங்கு வந்த கடையின் உரிமையாளர் நாகூர் மீரான் , குப்பையை எடுக்கும்படி தகாத வார்த்தையால் அவரை பேசியுள்ளார். இதை துப்பரவு மேற்பார்வையாளர் லட்சுமணன் தட்டிக் கேட்டுள்ளார். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நாகூர் மீரான் மற்றும் கடையின் ஊழியர்கள் , அர்ஜுனனையும் , லட்சுமணனையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். துாய்மை பணியாளர்களின் புகாரையடுத்து , நாகூர் மீரான் ( வயது 32 ) மற்றும் ஊழியர் தர்மதுரை ( வயது 33 ) ஆகிய இருவரையும் மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தவறுதலாக கால் பட்டதால் , அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்

திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் மோத்தி ( வயது 30 ) மாநகர பேருந்து நடத்துநர். இவர் பிராட்வே பேருந்து நிலையம் அருகே கடையில் டீ குடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அருகில் நின்றவரின் மீது தவறுதலாக கால்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் தன் நண்பருடன் சேர்ந்து மோத்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மோத்த, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து , நடத்துநரை தாக்கிய பாரிமுனையைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 18 ) , கவுதம் ( வயது 19 ) ஆகியோரை கைது செய்தனர்.