கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன் மற்றும் மயூரா ஜெய்க்குமாரை ஆகியோரை தாண்டி வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்றார். கடைசி நேரம் வரை யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு கோவை தெற்கு தொகுதியில் நிலவியது. தனது தேர்தல் முடிவுகளை காண சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்பிச் சென்றார். மாலை வரை அங்கு கமல்ஹாசனே முன்னிலையில் இருப்பதாக முடிவுகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடைசி இரண்டு சுற்றுகளில் வானதி முன்னிலைக்கு சென்றார்.
இந்நிலையில், ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வரும் வானதி சீனிவாசனிடம், பரப்புரையின் போது "வலிமை அப்டேட் எப்போ ?' என ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என்று தனது பதிலை பதிவு செய்து இருந்தார் .
நேற்று தமிழ்நாடு 2021 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தது . நடிகர் கமல் ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் இருவரின் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவது ட்ரெண்ட் ஆனது .நீண்ட காத்திருப்பிற்கு பிறகு வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர் என்ற செய்தி வெளியானது . இணையத்தில் இது பலரை சோகத்தில் ஆழ்த்தினாலும் .. அஜித் ரசிகர்கள் "வலிமை அப்டேட் எப்பொழுது வரும் " என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து உள்ளனர் .