கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம். 

  


கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்


கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள். தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   


 



மு.க ஸ்டாலின் 


 


 


மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து, மூன்றாவது முறையாக மம்தா பேனர்ஜி மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறார். 


அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 


கேரளாவில்  இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மீண்டும், முதல்வராகிறார் பினராயி விஜயன் . 


புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.     


காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி.


கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 12,403 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி. கடம்பூர் ராஜு (அதிமுக) 68,556 வாக்குகளும், டிடிவி தினகரன் (அமமுக) 56,153 வாக்குகளும் பெற்றனர்.  


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் கோவிட் - 19 னால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை  14,346 ஆக அதிகரித்துள்ளது.