தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் வேட்பாளர்களும் பிரசாரத்திற்கு மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரிக்கப் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4ஆம் தேதிவரையிலான ஒரு வார காலகட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 4.9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.


தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19 அன்று 21 மாநகராட்சிகள்,  138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றப்படுகிறது. கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதிவரை, சுமார் 4.9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 



இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ”சுமார் 3.53 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படையினரால் 39 மடிக்கணினிகள், 4 ஐஃபோன்கள், காலணிகள், துண்டுகள், சில்க், சிந்தெடிக் ஆகிய புடவைகள், பரிசுப் பொருள்கள் என மொத்தம் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த மதுபான பாட்டில்களின் மதிப்பு 15.9 லட்சம் ரூபாய்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு சுமார் 4.9 கோடி ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாநில தேர்தல் ஆணையத்தின் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில், மேலும் அதிகளவில் பணமும், பொருள்களும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு... வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மனைவி... நொந்தவாசியான வந்தவாசி!


PM Modi Speech Lok Sabha | ஆட்சிக்கு வரமுடியவில்லை..அகங்காரமும் குறையவில்லை.. ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்