தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1-9 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன், கல்விதொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று அதிகரிப்பால் 10, 11,12ஆம் வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடப்பட்டது. இந்த நிலையில் , தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும், பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதேபோல், தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பால் ஜனவரி 31ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விடுமுறை வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


பல்­க­லைக்­க­ழ­கங்­கள், கல்­லூ­ரி­களில் பயி­லும் நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்­க­ள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், மாநி­லத்­தில் உள்ள அனைத்து பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்­கும் ஜனவரிம் 20ஆம் தேதி வரை விடு­முறை விடப்­பட்­டது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண