இருவேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்றத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள்,வளர்ச்சிப் பணிகள் ஆய்வு, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் என மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். கார், ரயில், விமானம் என அவரது ஒவ்வொரு பயணமும் பொதுமக்களிடையே பேசுபொருளாகவே மாறியுள்ளது. 

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், திமுக நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.அதனைத் தொடர்ந்து கார் மூலம் சின்னியம்பாளையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுக் கட்சியினர் 6 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதனையடுத்து ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று  சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சமீபத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் 700 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது.  இதனால் கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதமலைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விட்டு இரவு 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இதனிடையே முதலமைச்சர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் இன்று ட்ரோன் கேமராக்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.