தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன.


திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என அதிமுக கூறியுள்ளது.






பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘முன்னோர்’ மரியாதையுடன் துவங்கிய பட்ஜெட்,முந்தைய ஆட்சியின் தவறுகளால் என ‘ வெள்ளை அறிக்கை ‘ அடித்தளமிட்டுமத்திய அரசின் மீது பழி போட்டு விட்டு இப்போதுதான் ‘ புரிந்தது’ என தன்நிலை சுட்டி ,குடும்ப பாரம்பரியத்துடன் நிறைவடைந்தது’ எனப் பதிவிட்டுள்ளார்.






இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் எதிர்பார்த்தப்படி தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லை. வழக்கம்போல்  மத்திய அரசு குற்றம்சாட்டி அதற்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்பு இருந்தவர்கள் மீது பழி சுமத்தி, தற்போது இருப்பவர்கள் ஆட்சி செய்வது, அதிகாரத்துக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை  மறப்பது அம்னீஷியா’ எனப் பதிவிட்டுள்ளார்.






‘தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல - நிதியமைச்சர்.திமுக ஆட்சிக்கு வந்த பின் சந்தேகம் வேறா?’ என பாஜக மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி எனப் பதிவிட்டுள்ளார்.


 






'தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.