தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 


இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.


மத்திய அரசின் நிதிவழங்கும் முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையிலிம் இதே போன்றே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 


மத்திய வரிகளில் பங்கு: 2006-07 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் பெறப்பட்ட மத்திய வரிகளின் பங்கினை கீழேயுள்ள அட்டவணை 28 காட்டுகிறது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மத்திய வரிகளின் பங்கு, 2007-08 ஆம் ஆண்டில் அதிக அளவான 2.20 சதவீதத்திலிருந்து கோவிட் தொற்றுக்கு முன் 2019-20 ஆம் ஆண்டில் 1.43 சதவீதமாகவும், 2020-21 ஆம் ஆண்டில் 1.28 சதவீதமாக குறைந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் மேல்வரிகளை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிரக்கூடிய நிதியைக் குறைத்ததால் விகிதாச்சாரம் மேலும் குறையும்.       




14 வது மற்றும் 15 வது நிதிக்குழுக்கள் 2011 மக்கள் தொகைக்கு மாறியது தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது.


10 வது நிதிக்குழுவில் மத்திய வரிகளின் பங்ககு 6.63 சதவீதமாக இருந்தது. இது 15 வது நிதிக்குழுல் 4. 07 சதவீதமாகக் குறைந்துள்ளது.


மக்கள் தொகைப் பகிர்வில் 6.124 விழுக்காடும் வரி வருவாயில் 4.079 விழுக்காடும் கொண்டுள்ளது. இது, விகிதாச்சார அடிப்படையில் 66.607 விழுக்காடாகும். இது, ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களைத் தொடர்ந்து மூன்றாவது குறைந்தபட்ச விகிதமாகும்.


TN Budget 2021 Live Updates: மதுரையில் மெட்ரோ ரயில்... சென்னையில் விரிவாக்கம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு!


அடுத்த நிதிக்குழுவிற்கு தமிழ்நாடு போன்ற தன் சொந்த வருவாயை நம்பியுள்ள செயல்திறன் மாநிலங்கள், மாநிலங்களுக்கு இயற்றப்படும் அநீதியை தவிர்ப்பதற்கு உரிய விதிமுறையை மாற்றியமைக்கத்தக்க வலுவான வாதத்தை முன் வைக்க வேண்டும்


ஒன்றிய அரசால் சில வரிகள் மீது விதிக்கப்படும் சலுகைகள் காரணமாக மாநிலங்களுக்கான நதி அளிப்பும் குறைந்தன. 2017-18 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய வரவு செலவுத் திட்டத்தில் பெருநிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 


பெட்ரோல்/டீசல் வரி: 


2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. 



2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. 



மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார். 


பட்ஜெட் கூட்டத்தொடர்:  பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.