TN Budget 2021 Live Updates: வெளிநடப்பு... விறுவிறுப்பு... சுறுசுறுப்பு... எப்படி இருந்தது முதல்வர் ஸ்டாலினின் முதல் பட்ஜெட்?

Tamil Nadu Budget 2021-22 Live Updates: திமுக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான அனைத்து அப்டேட்களும் இந்த லைப் பிளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 13 Aug 2021 04:13 PM
மூன்று மணி நேர அறிவிப்புக்கு பின் நிறைவு பெற்றது பட்ஜெட்!

தமிழ்நாட்டின் பொது பட்ஜெட் சுமார் 3 மணி நேரம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு சலுகைகளும், திட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பெட்ரோல் விலை வரி குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தது. பட்ஜெட் துவங்கியது முதல் தற்போது வரையிலான அனைத்து அப்பேட்களும் கீழே உள்ளன. அவற்றை பார்த்து அறிந்து கொள்ளவும். 

பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம்

மோசடி ஆவணங்களின் பதிவை  ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறை தலைவருக்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

வரி ஏய்ப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு 

கடந்த ஆட்சியில் 60 ஆயிரம் கோடி இழப்பு -பிடிஆர்

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டியுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு


 

நடப்பாண்டு நிதி பற்றாக்குறை எவ்வளவு

தமிழ்நாட்டின் நடப்பாண்டு நிதிபற்றாக்குறையாக  ரூ.92529.43 இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு


 

ஒட்டு மொத்த வருவாய் செலவீனம் அறிவிப்பு

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் செலவீனம் நடப்பு நிதியாண்டில் ரூ.261188.57 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 



நடப்பாண்டின் மொத்த வருவாய்- அமைச்சர்அறிவிப்பு

நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.260409.26 கோடி என பட்ஜெட்டில் அறிவித்தார் நிதியமைச்சர் பிடிஆர்.

பெட்ரோல் வரி குறைப்பால் ஏற்படும் இழப்பு

பெட்ரோல் வரி குறைப்பதால் ஆண்டுக்கு ரூ.1160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு


 

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ஆக குறைப்பு

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ஆக குறைத்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.2756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவிப்பு 


 

விவசாய நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் அறுவிப்பு

விவசாய கடன் தள்ளுபடி குறித்து உரிய ஆய்வு செய்த பின் முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுமா? அமைச்சர் அறிவிப்பு!

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தகுதியான குடும்பங்களை கண்டறிந்து வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கார்டில் தலைவர் பெயர் மாற்றம் தேவையில்லை

ரேஷன் கார்டில் பெண் தலைவராக இருந்தால் தான் உதவித் தொகை என்பது தவறு. எனவே அதை மாற்ற வேண்டியதில்லை என அறிவிப்பு

2022 முதல் அரசு ஊழியர் அகவிலைப்படி

அரசு ஊழியர் அகவிலைப்படி 2022 முதல் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

கொசஸ்தலை ஆறு வெள்ளநீர் வடிகாலுக்கு நிதி ஒதுக்கீடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிதியாக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்

தூத்துக்குடியில் 60 எம்எல்டி கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

மசூதிகள் மற்றும் சர்ச் புதுப்பிக்க நிதி!

மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு 

பழங்குடியினர் துணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.1306 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிடர் பழங்குடியிருனருக்கு நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.4142.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் முனைவர் படிப்பு உதவித்தொகை மறுசீரமைப்பு

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான முனைவர் படிப்பு கல்விக்கான உதவித்தொகை மறுசீரமைக்கப்படும் என அறிவிப்பு


 

புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு


 

அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்த நிதி

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.48.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு


 

3ம் பாலினத்தவர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி!

3ம் பாலினத்தவர் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு



திருமண உதவித்தொகை திட்டம் புத்துயிர்

திருமண நிதி உதவித்திட்டங்களுக்கு ரூ.762 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அத்திட்டம் புத்துயிர் ஊட்டப்படும் என அமைச்சர் அறிவிப்பு

300 சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு

தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி நிதி

சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு



கால பூஜைக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு

12955 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்திற்காக ரூ.130 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு


 

100 கோயில்களின் தேர்கள் சீரமைப்பு

தமிழ்நாட்டில் உள்ள 100 கோயில்களில் 100 கோடி செலவில் தேர் மற்றும் குளங்கள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு

கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்பு

ரூ.626 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

திருச்சியில் புதிய பேருந்து நிலையம்

திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

துணி நூல் துறைக்கு தனி இயக்குனரகம்

துணிநூல் துறைக்கு தனி இயக்குனரகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர்அறிவித்தார்

இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு 490.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு




 

குவாரிகள் மூடப்பட்டு பாதுகாக்கப்படும்

தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட குவாரிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு


 

மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு

மகளிருக்கு முக்கியத்துவம் தரும் விதமாக 9 மாதமாக உள்ள மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு. 


 

நமக்கு நாமே விருதுக்கு நிதி ஒதுக்கீடு

நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு முதல்வர் விருது வழங்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு


 

நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்

நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்பநகரம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு 


 

முதலீடுகளை ஊக்குவிக்க திட்டம்

முதலீடுகளை ஊக்குவிக்க புலம் பெயர் தமிழர்களுடன் நல்லுறவு மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு


 

திருவள்ளூரில் மின்வாகனப் பூங்கா அமைக்கப்படும்

திருவள்ளூரில் மின்வாகனப்பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு


 

மகளிர் குழுக்களுக்கு கடன் உறுதி

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும் என பிடிஆர் அறிவிப்பு

அமைப்பு சாரா நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு

அமைப்பு சாரா நல வாரியத்திற்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

மருத்துவத்துறைக்கான நிதி அறிவிப்பு

மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18933.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு

சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கப்படும்!

சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் அமைக்கும் விதமாக ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு

ரூ.509 கோடி நிவாரண நிதி வரவு

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.509 கோடி வரவு வந்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 


 

கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

தமிழ்நாட்டில் 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்க ரூ.10 கோடி  நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு 

உயர்கல்வி துறைக்கு ரூ.5369 கோடி நிதி ஒதுக்கீடு

உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவிப்பு 

ஆளில்லா விமான கழகம் உருவாக்கம்

அண்ணா பல்கலை உடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என அறிவிப்பு

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்

தமிழ்நாட்டில் 865 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

புதிதாக 10 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும்

10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும் என அறிவிப்பு

8 வயதிற்கு உட்பட குழந்தைகளின் அறிவை பெருக்க ரூ.66 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

கற்றல் செயல்பாட்டில் முதல் மூன்று இடங்களில் வர நடவடிக்கை!

கற்றல் செயல்பாட்டில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம்- பிடிஆர்

பள்ளிகல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ.32599.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு


 

27 நகரங்களில் பாதாளச் சாக்கடை திட்டம்

27 நகரங்களில் பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல- நிதி அமைச்சர்

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல. அவ்வாறு கூறி வந்தது தவறு என நிதியமைச்சர் அறிவிப்பு

கோடம்பாக்கம்-பூந்தமல்லி மெட்ரோ திட்டம்!

4 ஆண்டுகளில் சென்னை கோடம்பாக்கம்-பூந்தமல்லி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் மெட்ரோ திட்டம்

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு. 

புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

மகளிர் இலவச பஸ் சேவைக்கு நிதி ஒதுக்கீடு!

மகளிர் இலவசமாக பஸ்களில் பயணிக்க மேலும் ரூ.750 கோடி டீசல் மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17899.17 கோடி ஒதுக்கீடு!

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17899.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

உலக வங்கி மற்றம் ஆசிய வங்கி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

உலக வங்கித் திட்டங்களுக்கு ரூ.320.40 கோடியும், ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு

சுயஉதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என அறிவிப்பு

எம்.எல்.ஏ., நிதியாக மீண்டும் ரூ.3 கோடி

எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் ரூ.3 கோடி வழங்கப்படும் என அறிவிப்பு

நகரமயமாவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாவது ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிப்பு

நீர் வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு

சென்னையில் நீர் வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னையில் 3 இடங்களில் பாதாளச்சாக்கடை திட்டம்

சென்னையில் 3 இடங்களில் பாதாளச்சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி நிதி ஒதுக்கிடு செய்து உத்தரவு

கொரோனா சிறப்பு கடன் ரூ.5500 கோடி

கொரோனா சிறப்பு கடன் ரூ.5500 என நிதிஅமைச்சர் சார்பில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

அம்ருத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு அறிவிப்பு

அம்ருத் திட்டத்திற்கு ரூ.1450  கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு

சிங்காரச் சென்னை 2.0 உருவாக்கப்படும்

சென்னை மாநகராட்சியை புதுப்பொலிவாக மாற்ற சிங்காரச் சென்னை 2.0 திட்டம் உருவாக்கப்படும் என அறிவிப்பு

நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்குகள்

அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்குகள் அமைக்கப்படும் என அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை வசதி

அனைத்து நகரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நடைபாதை அமைக்கப்படும் என அறிவிப்பு

ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதியம் அதிகரிப்பு

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான ஊதியம் ரூ.300 ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1200 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு

ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத திட்டம்

தமிழ்நாடு கிராமங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு


 

803924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்

அடுத்த 5 ஆண்டுகளில் 803924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என அறிவிப்பு


 

ஜல்ஜீவன் திட்டம்: ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் 

10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு

தமிழ்நாட்டின் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு

மீன்வளத்துறைக்கு நிதி ஒதுக்கிடு

மீன்வளத்துறைக்கு ரூ.1149.79 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்

ரூ.500 செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

புதிதாக 6 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்

தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடியில் ஆய்வு  மேற்கொள்ளப்படும். 

காசிமேடு மின்பிடி துறைமுகம் மேம்பாடு; ரூ.150 கோடி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு

ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணி உலக வங்கி உதவியோடு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு

200 குளங்களின் தரம் உயர்த்தப்படும்

தமிழ்நாட்டில் ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

5 ஆண்டுகளில் 1000 அணைகள்!

அடுத்த 5 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு

பொது வினியோத்திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் புதிய ரேஷன் கடைகள்

தமிழ்நாட்டில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு தீயணைப்பு மற்றம் மீட்புத்துறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு

வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு- உருவாக்கம்

அரசின் நிதி வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறைக்கு ரூ.8930 கோடி ஒதுக்கீடு

காவல் துறைக்கு ரூ.8930 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

காவல்துறையில் 12317 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

காவல்துறையில் காலியாக உள்ள 14317  பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு

காவல்துறையின் தரம் மீட்டெடுக்கப்படும் - பிடிஆர்

தமிழ்நாடு காவல்துறையின் தரம் மீட்டு எடுக்கப்படும் என நிதிஅமைச்சர் அறிவிப்பு

4133 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் 4133 இடங்கள் அதிக வெள்ளபாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்படும். 

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சிகம் அமைக்கப்படும்

கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை கொண்டு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

மாநிலம் முழுதும் நில ஆய்வு

மாநிலம் முழுவதும் நவீன நில ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதிஅமைச்சர் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கீடு!

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவிப்பு

அறிவியல் முறையில் தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு என நிதி அமைச்சர் அறிவிப்பு

கலைஞர் செம்மொழி விருது அறிவிப்பு

ஜூன் 3 கலைஞர் செம்மொழி விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

கலைஞர் செம்மொழி விருது அறிவிப்பு

ஜூன் 3 கலைஞர் செம்மொழி விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

1921 முதல் சட்ட மன்ற ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகும் - பிடிஆர்

1921 முதல் சட்டமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் கணினி மயமாகும் என பிடிஆர் அறிவிப்பு

நிதிநிலையை சமாளிக்க 3 ஆண்டுகள் ஆகும் - பிடிஆர்

தமிழ்நாடு நிதி சிக்கலை சமாளிக்க 3 ஆண்டுகள் ஆகும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அறிவிப்பு

அரசு நிதி அனைத்தும் கருவூலத்தில்- பிடிஆர் அறிவிப்பு

அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்

கணினி மயமாகும் துறைகள்- பிடிஆர்

அனைத்து துறையின் நடவடிக்கைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும் -பிடிஆர்

சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும்- பிடிஆர்

வரிமுறையை சீர்செய்ய சட்ட பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு நியமிக்கப்படும் என பிடிஆர் அறிவிப்பு

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு- பிடிஆர்

மத்திய அரசின் நிதிவழங்கும் முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது-பிடிஆர் பட்ஜெட் கூட்டத்தில் பேச்சு

பட்ஜெட்டுக்கு முன் மக்கள் பிரச்னை பற்றி பேச அதிமுக வலியுறுத்தல்: மறுத்ததால் வெளிநடப்பு

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என அதிமுக தரப்பில் கூச்சலிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். 

தேர்தல் அறிக்கை: பிடிஆர் அளித்த வாக்குறுதி!

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு படிப்படியாக அவை நிறைவேற்றப்படும்- பிடிஆர்

6 மாதங்களுக்கு பொருந்தும்.... -பிடிஆர் பேச்சு

திருத்திய வரவு செலவு எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் என நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளி

பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக எம்எல்ஏ.,க்கள் அமளி. 

பட்ஜெட் உரையை துவக்கினார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பட்ஜெட் தாக்கல் உரையை துவக்கினார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். சபாநாயகர் அப்பாவு அழைத்ததன் பேரில் தனது பட்ஜெட் உரையை துவக்கினார் பிடிஆர்.

பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு

பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. தற்போது அவர் பட்ஜெட் அரங்கில் தனது உரையை நிகழ்த்தி வருகிறார்.

சபாநாயகர் அப்பாவு... நிதி அமைச்சர் பிடிஆர் ஆகியோர் அரங்கம் வந்தனர்

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் நிதிஅமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வருகை வந்தனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் பிடிஆர்

பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக வாழ்த்து பெற்றார். 

பட்ஜெட் அரங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் கலைவாணர் அரங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது வருகை புரிந்துள்ளார். அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். 

பட்ஜெட் அரங்கிற்கு வரத்தொடங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்!

இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது பட்ஜெட் அரங்கிற்கு வரத்தொடங்கியுள்ளனர். 

பட்ஜெட் அரங்கில் குவிந்த ஊடகவியலாளர்கள்!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் கலைவாணர் அரங்கில் இப்போதே ஊடகவியலாளர்கள் குவியத்துவங்கியுள்ளனர். நேரலை செய்வதற்கான வாகனங்களும் அங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

110 விதிகள் அறிவிப்பு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டதாகவும், ஆனால் அவற்றில் எவை நிறைவேற்றப்பட்டது, எவை நிறைவேற்றப்படவில்லை என்பது தெரியவில்லை என நிதி அமைச்சர் பிடிஆர் பேட்டியில் கூறியுள்ளார். 

பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்கும் கட்சிகள் யார்?

பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் என பட்ஜெட் இரு பிரிவுகளாக தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பட்ஜெட் மீதான தங்களின் விவாதத்தை முன்வைக்க உள்ளனர். 

சிக்கலான சூழலில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்!

தமிழ்நாடு அரசின் கடன்சுமைரூ.5.50 லட்சம் கோடியை தாண்டிய நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ரூ.5.70 லட்சம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலான சூழலில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

எத்தனை மணிக்கு தாக்கல் ஆகிறது பட்ஜெட்?

சரியாக காலை 10 மணிக்கு தமிழ்நாடு பொது பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதற்கான அனைத்து ஏற்பாடுகள் ஏற்கனவே சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 

இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட மொத்த கடன், வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

2021-22ம் ஆண்டிற்காக அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் படி நிலுவையில் உள்ள மொத்த கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அமைச்சர் வாசிக்க... அறிவிப்புகள் திரையில் வரும்! கணினி உடன் கையடக்க தொடுதிரை கணினியும் உண்டு!

இன்று காலை தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் போது, அவரது அறிவிப்புகள் எம்.எல்.ஏ.,க்கள் மேஜையில் வைக்கப்பட்டுள்ள கம்யூட்டர் திரையில் தெரியும். அது மட்டுமல்லாமல் எம்.எல்.ஏ.,க்களுக்கு கையடக்க தொடுதிரை கணினி(டேப்லெட்) வழங்கப்பட உள்ளது. அதிலும் பட்ஜெட் உரை இடம்பெற்றிருக்கும். அமைச்சர் உரையை துவங்கியதும் அது எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும்

7 மாதங்களுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அதிமுக

தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 23ம் தேதி அன்றைய அதிமுக அரசின் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். அதன் பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் 2021-22ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை திமுக அரசு இன்று தாக்கல் செய்கிறது. 

பஸ் கட்டணம் உயராது.... -அமைச்சர் திட்டவட்டம்

தமிழ்நாடு பொதுபட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இன்றைய அறிவிப்பில் பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ‛‛போக்குவரத்துதுறை நஷ்டத்தில் இயங்கினாலும் இப்போதைக்கு கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை,’’ என்று கூறியுள்ளார்

வரி உயர்வு அறிவிப்பு இன்று அறிவிக்கப்படுமா? -அமைச்சர் பிடிஆர் விளக்கம்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‛‛பொதுவாக வரி உயர்த்தியே ஆக வேண்டும். ஆனால் இப்போதே அது நடக்கும் என யாராவது கனவு கண்டால், அதற்கு பதில் சொல்ல முடியாது’’ என்று கூறியிருந்தார். 

முதல்வர் ஸ்டாலினின் முதல் பட்ஜெட்

முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜனுக்கும் இதுவே முதல் பட்ஜெட்.

முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த முறை பட்ஜெட் தொடங்கும் முன்பே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். 

பட்ஜெட் விவாதம்: தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்!

இன்று காலை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பொதுபட்ஜெட் குறித்த விவாதம் அடுத்த 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த எதிர்கட்சிகளின் விவாதத்திற்கு அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் பதிலளிப்பார்கள். 

பட்ஜெட் அரங்கை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் அரங்கை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். கூட்டத்தொடர் குறித்த ஏற்பாடுகள்குறித்தும் அவர் கேட்டறிந்தார். அமைச்சர் துரை முருகன் உடன் அவருடன் ஆய்வில் பங்கேற்றார். 

இதுவரை இல்லாத புதிய முறை: இ-பட்ஜெட் தாக்கல்!

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இம்முறை இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. காகிதம் இல்லாமல் கம்யூட்டர் வழியாக அனைத்து விபரங்களும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பகிரப்படும். அதற்காக கலைவாணர் அரங்கில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் இருக்கையிலும் கம்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 

Background

Tamil Nadu Budget 2021-22 DMK: தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது.


முன்னதாக, இன்று பட்ஜெட் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட், ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி நான்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார். 


தமிழ்நாட்டில் விவசாயிகள் வளமாக வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.தேனி மாவட்டம் வைகை அணையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  
விவசாயிகளின் நலன்களை பேணுவதில் அரசு எப்போதும் முழு முயற்சியுடன் ஈடுபடும் என்று குறிப்பிட்டார்.


காலை 5 மணியிலிருந்து பட்ஜெட் தொடர்பான முழு விபரங்களை ABP நாடு இணையத்தை பின்தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.