சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 2021-22-ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்து பேசியபோது,
“தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 133 இடங்கள் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையில் தரத்தை மீட்டெடுக்கப்படும். காவல்துறையில் காலியாக உள்ள 14 ஆயிரத்து 317 பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறைக்கு ரூபாய் 8 ஆயிரத்து 930 கோடி என்று ஒதுக்கப்படும். அரசின் நிதி வழக்குகளை கையாள வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு ரூபாய் 405.13 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பெண்கள, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், ரூபாய் 36 ஆயிரத்து 218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலை உடனுக்குடன் அறிய TN Budget 2021 : நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
முன்னதாக, தமிழகத்தின் புதிய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்திற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வருகை தந்தனர். பின்னர், சரியாக காலை 10 மணியளவில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு அழைத்ததன் பேரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
பட்ஜெட் தகவல்களை உடனுக்குடன் அறிய