தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் உரையாற்றி வருகிறார். 


அந்த உரையில், “நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம், பன்ரூட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி செலவில் குளிப்பாதன கிடங்குகள் மாநில அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும். 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும். மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய், கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம், தென்காசி மாவட்டத்தில் எலும்பிச்சை, நெல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.


காய்கறி பயிரிடவும், 638 ஹெக்டர் பரப்பில் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை பயிரிடவும் அனைத்து மாவட்டங்களிலும் 1000 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும். இந்த திட்டம் 95 கோடி ரூபாய் செலவில் மாநில ஒன்றிய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை " சிறப்பு ஊக்கத்தொகையாக " டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள். 


 






நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும், சிறு தானியங்களுக்கென பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். அறுவடை பின்செய் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டமிடப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


பயிர்கள் தென்னை, கம்பு, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு எட்டிட வழிவகை செய்யப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும். தென்னையில் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள். மேற்கொள்ளப்படும்.


ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பயிர் வகைகளை கொள்முதல் செய்து மதிய உணவுத் திட்டத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைந்து வருவதால் திட்டத்தை செயல்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்” என்று கூறினார்.


TN Agri Budget 2021 Live Updates: பனைமரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்; பட்ஜெட்டில் அறிவிப்பு