TN Agri Budget 2021 Live Updates: நெல்லுக்கு... கரும்புக்கு விலை...பலா, மிளகு, பொன்னிக்கு புவிசார்... நிறைவு பெற்ற பட்ஜெட்!
TN Agri Budget 2021 Live: வேளாண் பட்ஜெட் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை இந்த பிளாக் பகுதியில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
பொன்னி அரிசி, கொல்லி மலை மிளகு, பண்ரூட்டி பலாவுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநில அரசு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அடைந்து கொள்வதற்கு ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்
கடலூர்,திண்டுக்கல் ஈரோடு புதுக்கோட்டை,தஞ்சாவூர் திருநெல்வேலி,திருச்சி,வேலூர் கரூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகளிலும் நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரூ.2 கோடியில் பலாப்பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
ரூ.23.29 கோடி செலவில் 4 ட்ரோன் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3.13 லட்சம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெட்டேராக உயர்த்தப்படும் என அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம் அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்: அமைச்சர்
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயரும்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
அரவை பருவத்தில் 1 டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.150 வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
நடப்பாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரத்து 100 உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்து வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய ஒரு குழுவுக்கு 5 லட்சம் வீதம் மூலதன நிதி வழங்கப்படும்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்
நடப்பாண்டில் 1.7 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி மேற்கொண்டு சுமார் 4 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யவும் சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை
நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதை களையும், ஒரு லட்சம் பனை மரங்களை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
முதல் கட்டமாக இந்த ஆண்டு 2500 இளைஞர்களுக்கு ஒட்டுக்கட்டுதல் ,பதியம் போடுதல், கவாத்து செய்தல் பசுமை குடில் பராமரித்தல் நுண்ணீர் பாசன அமைப்பு பராமரித்தல் தோட்டக்கலை இயந்திரங்கள் இயக்குதல் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்குதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் . இத்திட்டத்திற்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கு 25 லட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என அறிவிப்பு
வேளாண்மை பெருமையை இளம் சந்ததியினர் அறிய சென்னையில் ரூ.2 கோடியில் வேளாண் அருங்காட்சியம்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
பயிர் காப்பீடு 2ம் தவணைத் தொகையாக ரூ.1248.92 கோடி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ்ர் செல்வம் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ.4508.23 கோடி ஒதுக்கீடு
சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்: ரூ.114.68 கோடி ஒதுக்கீடு
டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்.
மதிய உணவு திட்டத்திலும் ரேசன் கடையிலும் பயிறுவகைகள் வினியோகம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு
மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் ரூ.12.44 கோடி செலவில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும்.
பயிர் வகைகளை கொள்முதல் செய்து மதிய உணவுத் திட்டத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம்
தமிழ்நாட்டில் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு.
தென்னையில் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம் அறிவிப்பு
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு
விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகள் ஆவதால் குறைந்து வரும் சாகுபடி, பரப்பு மங்கி வரும் மண் வளம், பற்றாக்குறையாகும் நீர் வளம் ஆகியவை வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களாக உள்ளது.
அறுவடை பின்செய் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.. இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை " சிறப்பு ஊக்கத்தொகையாக " டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு. இதன் மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்.
காய்கறி பயிரிடவும், 638 எக்டர் பரப்பில் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை பயிரிடவும் அனைத்து மாவட்டங்களிலும் 1000 எக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும்..இந்த திட்டம் 95 கோடி ரூபாய் செலவில் மாநில ஒன்றிய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும்
திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய், கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம், தென்காசி மாவட்டத்தில் எலும்பிச்சை, நெல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்..இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்
மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர் அறிவிப்பு
50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம், பன்ரூட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி செலவில் குளிர்ப்பாதன கிடங்குகள் மாநில அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும்
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
விவசாய விளைபொருள்களை அருகில் உள்ள பெரு நகர சந்தைகளுக்கு எடுத்துச் சென்று லாபகரமாக சந்தைப்படுத்துவதற்கு சிறிய இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் 59 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்.
நடப்பு ஆண்டில் 1.10 லட்சம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, 1100 உழவு உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைத்து வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஒரு குழுவிற்கு ரூ.5 லட்சம் வீதம் மூலதன நிதி வழங்கப்படும்
தோட்டக்கலை துறையின் மூலம் தோடக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும். இத்திட்டம் 21 கோடியே 80 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
வேளாண் தோட்டக்கலை பயிற்களில் பாரம்பரிய நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்படும்
அண்ணா பண்ணை மேம்பாடு திட்டம்: அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப்பண்ணையாக மேம்படுத்தப்படும்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியினர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கென பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரூ லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டில் 125 மெட்ரிக் டன் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைப்பு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
மாநிலம் முழுவதும் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர்கள் அறிவிப்பு
சிறு,குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைமுறையை தமிழ்நாட்டில் ஊக்குவிக்கப்படும் என அறிவிப்பு
அடுத்த 10 ஆண்டுகளில் சாகுபடி பரப்பை 20 லட்சம் எக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பை 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு
உணவு தன்னிறைவை தமிழ்நாடு ஓரளவு எட்டிவிட்டதாக அமைச்சர் பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் அறிவிப்பு
வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் வெளியிடுவது என்பது தொலைநோக்கு திட்டம்- வேளாண் அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு
வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் வெளியிடுவது என்பது தொலைநோக்கு திட்டம்- வேளாண் அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு
வேளாண் வணிகர்கள் கோரிக்கையை கேட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் . அமைச்சர் பன்னீர் செல்வம்
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக தாக்கலாகும் வேளாண் பட்ஜெட்டில், கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.1,200 கோடி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்டமைக்கு முன்னுரிமை தரும் வகையில் தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
Background
தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -