திருத்துறைபூண்டி நகர மன்ற துணைத் தலைவர் சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகம் முழுவதும் இன்று நகர மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று நகரமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி கூத்தாநல்லூர் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும் 7 பேரூராட்சிகளுக்கும் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.


திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர்கான பதவியை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சிபிஎம் கட்சியின் மாநில நிர்வாக குழு திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் வேட்பாளராக ராமலோக ஈஸ்வரி என்பவரை அறிவித்திருந்தது. இவர் திருத்துறைப்பூண்டி சிபிஎம் கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர் மேலும் சத்தம் கேட்டு வெளியில் வந்த வேட்பாளர் மற்றும் அவருடைய கணவர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்து உள்ளனர். அதனைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர். வேட்பாளர் வீட்டில் காவல்துறையினர் வந்து சோதனை செய்தபோது பெட்ரோல் அதிக அளவில் அந்த இடத்தில் ஊத்தப்பட்டு இருந்தது மேலும் சிறு சிறு துகள்கள் சிதறிக் கிடப்பது கண்டு பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார்களா அல்லது பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்துறைபூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு சிபிஎம் கட்சி வேட்பாளர் அறிவித்திருந்த நிலையில் அவரது வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண