திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோவிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 4.45 மணிக்கு மேல் 6.13 மணிக்குள், அருணாச்சலேஷ்வரர் கோவிலில் 3ம் பிரகாரத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். பின்னர், துர்க்கையம்மன் உற்சவம் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் அதைத்தொடர்ந்து நாளை (15ம் தேதி) பிடாரி அம்மன் உற்சவமும், (16ம் தேதி) நடைபெறும் விநாயகர் உற்சவமும் அண்ணாம லையார் கோவில் இருந்து சாமி புறப்ட்டு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கொடியேற்றம் பிறகு அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வடம்பிடித்து பக்தர்கள் இழுப்பார்கள்.
விழாவின் 10ம் நாளான கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் சிவனே மலையாக போற்றும் மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்தபின்னர் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும், இந்த கார்த்திகை தீப திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி போன்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு அண்ணாமலையாரையும் தீபத்தையும் தரிசனம் காண வருவார்கள். அவர்கள் வந்து தங்கும் விடுதிகளில் தங்கி தீப தரிசனம் காண இருப்பதால் திருவண்ணாமலையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 25 ம் தேதி மட்டும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு 1000, 2000 ,3000 என்று அறைக்கு தகுந்தார் போல் கட்டண வசூல் செய்யும் தங்கும் விடுதிகள், தற்போது கார்த்திகை தீபத்து அன்று 25, 26 ஆகிய இரண்டு நாட்களிலும் 10 மடங்கு மற்றும் 15 மடங்கு அளவில் தங்கும் விடுதிகளுக்கு ஏற்றார் போல் விலையை உயர்த்தி கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டண கொள்ளை அடிக்கின்றனர். வேறு வழியில்லாமல் இந்த அளவுக்கு கேட்கும் கட்டணத்தையும் கொடுத்துவிட்டு தான் பக்தர்கள் தங்கி உள்ளது என்பதும் வேதனைக்கு உரிய விஷயம்.
உதாரணமாக ஒரு ஏசி அறைக்கு மற்ற நாட்களில் 1500 ரூபாய் வாங்குவார்கள். ஆனால் 25ஆம் தேதி 26 ஆம் தேதி 15000, 18,000 20,000, முப்பதாயிரம் 40 ஆயிரம் என விடுதிகளுக்கு ஏற்றார் போல் கண்டபடி கட்டணத்தை உயர்த்தி மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி எடுக்கின்றனர் விடுதி உரிமையாளர்கள். இதுகுறித்து அவர்களிடம் கேட்கும் பொழுது என்ன செய்வது வருடத்திற்கு ஒரு நாள் தான் இந்த தீபம் வருகிறது அன்று தான் நாங்கள் இந்த கட்டண உயர்வை பார்க்க முடியும் எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும். அதை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதனால் இந்த கட்டண உயர்வை அறிவிக்கிறோம் என்கின்றனர். இவ்வளவு கட்டணம் கொடுத்து தங்க வேண்டுமா என்று பொது மக்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர்கள் என்ன செய்வது இங்கு வந்து விட்டோம் இவர்கள் கேட்பது கொடுத்தாவது தங்க வேண்டும் வேறு எவ்வாறு தங்குவது என்பதே தெரியவில்லை என்றும் வேறு வழியில்லாமல் தான் கொடுக்கிறோம் என்று மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமோ காவல் துறையோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.