கரூர் மாவட்டம் அரசு காலனி பேருந்து நிறுத்தம் அருகே, மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் மாநில அமைப்பு மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் நீண்ட கால கோரிக்கையாக உள்ள மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மகாகவி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு பகுதியான தமிழ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் சாய்வு தள வசதியுடன் ரேம்ப் வசதி அமைத்து வழங்கிட வேண்டும்.
இந்த வாரியத்தில் கரூர் மாவட்ட வாரியத்தின் நிர்வாக கமிட்டி குழுவில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை உள்ளடக்கி பிரதிநிதிகள் ஆலோசனை குழுவில் மகாகவி மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க ஆண்,பெண் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்."குடியிருப்பு நமது பொறுப்பு" வாரியத்தில் தேர்வு செய்யும் சங்கத் தேர்தலை முறையாக நடத்தி உரியது இட ஒதுக்கீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், தமிழ் நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த விண்ணப்பம் வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.