Tiruvanamalai Deepam : திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்திருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோயிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது.


உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோவில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.


சிறப்பு பேருந்துகள்


திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம். அதன்படி, 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று 1,400 இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாகவும் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து 380 பேருந்தும் இயக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 


அதேபோல், விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் மூன்று நாள்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருக்கோவிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் திருவண்ணாமலைக்கு தாம்பரம், சென்னை கடற்கரை, மதுரை, திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சோதனை


இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி வெடிப்பொருட்கள் உள்ளனவா என சோதனை நடைபெறுகிறது. இதே போன்று,  திருவண்ணாமலையில் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோதனை சாவடிகளை அமைத்து உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை நகருக்குள் அனுமதித்து வருகின்றனர்.




மேலும் படிக்க


இன்று கார்த்திகை தீபம் ..... பெருமுக்கல் சஞ்சீவி மலை உச்சியில் 1008 லிட்டர் நெய் தீபம்: வரலாறு இதுதான்!


Tiruvannamalai: களைக்கட்டும் கார்த்திகை தீபம்... திருவண்ணாமலை கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!