Tiruvanamalai Deepam : திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு  2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.


தீபத் திருவிழா


கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது.


உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.


கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோவில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில்  பரணி தீபம்‌ , அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌) விஷ்ணு தீபம்‌, உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில்‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும்‌.  இவை டிசம்பவர் 6-ஆம் தேதி அன்று  மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.



சிறப்பு பேருந்து?


உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்தன்று ஏராளமானோர் வருடம் தோறும் வருவது வழக்கம். அதனால் பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது. கார்த்திகை தீபம் மறுநாள் அதாவது டிசம்பர் 7-ஆம் தேதி பௌர்ணமியும் உள்ளது. இதனால் தமிழக போக்குவரத்துத்துறை டிசம்பவர் 6 மற்றும் 7 தேதிகளில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.




மேலும் படிக்க


Samantha: மோசமான உடல்நிலை..! பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..! ரசிகர்கள் கவலை..


Kamalhassan: மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...