சிறுத்தை நட மாட்டம்:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறான பகுதிகளில் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று சிறுத்தை ஒன்று திடீரென சிக்கியது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் ஷெட்டில் சிறுத்தை ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. அந்த கார் ஷெட்டில் இருந்த 5 பேர் அங்கிருந்த 2 காருக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 பேர் பத்திரமாக மீட்பு:
இந்நிலையில் காரில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். அதாவது காரின் உள்ளே இருந்த பாஸ்கர், இம்ரான், தினகரன்,சுவாமிஜி, எம்ஜிஆர்(எ) வெங்கடேஷ் ஆகியோரை 7 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு ஏணி மூலம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இச்சூழலில் மீட்கப்பட்டவர்களில் கூறுகையில், “ கார் ஜன்னல் கதவு கூட திறக்க முடியாத அளவிற்கு பீதியாக இருந்தது. இந்த 7 மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் உடல் சோர்வானது. அவ்வப்போது அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தினர்”என்று கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 5 நபர்களையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அதிகாரிகள் அனுப்பு வைத்துள்ளனர். அதேநேரம் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினார் ஈடுபட்டுள்ளனர்.