திருப்பத்தூரில் போலீஸின் தொப்பியை அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை உதவி ஆய்வாளர் நிறைவேற்றியுள்ளார். நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த தருணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. போலீசாருக்கும் நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


 



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகண தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4 வயது சிறுவன் முபஷீர் தனது தந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென்று சிறுவன் காவல் உதவி ஆய்வாளர் ராஜாவிடம் சென்று, தங்களின் தொப்பியை போட்டுக்கொண்டு பைக்கில் ஒரு ரவுண்ட் செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளான். உடனே, சிறுவனுக்கு தனது தொப்பியை அணிவித்து பைக்கில் ரவுண்ட் அடித்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண