முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ஓய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
50வது தலைமை நீதிபதி:
இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஓய். சந்திரசூட் நவம்பர் 2022 முதல் நவம்பர் 2024 வரை 50வது தலைமை நீதிபதியாக பணியாற்றினர். ஓய்வு பெற்ற பிறகும் தனக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். அவர் அந்த இல்லத்தை காலி செய்ய வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட அனுமதி மே 31, 2025 அன்று காலாவதியானது என்பதையும், 2022 விதிகளின் விதி 3B இன் படி ஆறு மாத கால அவகாசம் கூட மே 10 அன்று காலாவதியானது.
வீட்டை காலி செய்யவில்லை:
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகார்வப்பூர்வ இல்லமான கிருஷ்ண மேனன் மார்க் பங்களா தற்போது உடனடியாக தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசு விதிப்படி, பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி அந்த பங்களாவில் தங்க வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை வகை VII பங்களா வசதி வழங்கப்படுகிறது.
ஆனால், முன்னாள் தலைமை நீதிபதி டி.வై. சந்திரசூட், ஓய்வு பெற்றும் எட்டு மாதங்கள் வரை வகை VIII பங்களாவில் தங்கியிருந்தார். அவரது பின்னணி நீதிபதிகளான சஞ்சீவ் கன்னா மற்றும் பி.ஆர். கவாய் இருவரும் அந்த பங்களா புறக்கணித்து, தங்கள் பழைய தங்குமிடங்களில் தொடர்ந்ததாலே இது சாத்தியமானது என்று சொல்லப்படுகிறது
வழங்கப்பட்ட கடிதம்:
உச்ச நீதிமன்ற நிர்வாகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு (MoHUA) எழுதிய கடிதத்தில், பதவியில் இருக்கும் தலைமை நீதிபதிக்கான நியமிக்கப்பட்ட இல்லத்தை காலி செய்து, நீதிமன்ற வீட்டுக்கு செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரசூட் விளக்கம்:
இது குறித்து விளக்கமளித்த சந்திரசூட் “எனக்கு ஒதுக்கப்பட்ட வாடகை பங்களாவில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்தவுடன் அங்கு சென்று விடுவேன். இந்த தாமதத்திற்கு எனது தனிப்பட்ட சூழ்நிலைகளே காரணம். "சிறப்புத் தேவைகள் உள்ள இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும் நான் இங்கு நீண்ட நாட்கள் தங்க விரும்பவில்லை. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதி, எனக்கு பொருத்தமான இடம் தேடும் வரை, ஜூன் 30ஆம் தேதி வரை இந்த பங்களாவில் தங்க அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.” என்று விளக்கமளித்திருந்தார்.