திருநெல்வேலி மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக covidcaretirunelveli என்ற பிரத்யேக இணையதளத்தை அம்மாவட்ட ஆட்சித் தலைவர் உருவாக்கியுள்ளார். அதன்படி, covidcaretirunelveli.in என்ற இணையதளத்தில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள், கொரோனா சோதனை மையங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மையங்களின் அமைவிடங்களை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள 84 கோவிட்-19 தடுப்பூசி மையங்கள், 65 மாதிரி சேகரிப்பு மையங்கள், 5 பரிசோதனை மையங்கள், 31 பாதுகாப்பு மையங்களின் இருப்பிடங்களை பற்றிய தகவல்கள எளிதாக வரைபடம் மூலம் காணலாம்.
மேலும், கோவிட் தொடர்பான அவசர உதவிக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு
கோவிட் பரிசோதனை மையங்கள் குறித்த தகவல்களுக்கு, கோவிட் கேர் மையங்கள் குறித்த தகவல்களுக்கு
கோவிட் தடுப்பூசி மையங்கள் குறித்த தகவல்களுக்கு 0462 - 2501012 & 0462 - 2501070 என்ற எண்ணிலும்
9499933893 & 6374013254 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி கொரோனா பாதிப்பு:
திருநெல்வேலியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 549 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது, திருநெல்வேலியின் ஒரு நாள் அதிகபட்ச கொரோனா தொற்று பாதிப்பாகும். அதேசமயம் 175 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 92.4 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, அம்மாவட்டத்தில் 3471 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தின் கொரோனா இறப்பு விகிதம் 0.8 சதவீதமாக குறைந்துள்ளது.
திருநெல்வியில் இரண்டாவது அலை தாக்கம்:
கடந்த மார்ச் மாதம் தாக்கிய கொரோனா முதல் அலையில் தமிழகத்தின் அநேக மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் திருநெல்வேலியில் கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டது. உதாரணமாக, முதல் அலையின்போது திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 385 (ஜூன் 28) ஆகும். ஆனால், தற்போதைய இரண்டாவது அலையில் 500-க்கு மேற்பட்ட பாதிப்புகள் அம்மாவட்டம் பதிவு செய்து வருகிறது.