”கொரோனா பேரிடரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையைச் சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் மட்டும் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யலாம்” என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. மேலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த சூழலில், இன்று நடைபெறும் கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறப்பு விவகாரம் குறித்து முக்கியமாக பேசப்பட்டது.