விழுப்புரம் : திண்டிவனம் அருகே தனது சொந்த செலவில் ஊராட்சியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கிலோ அரிசி, காய்கறிகள் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியம் கோணேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 25 கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் இஎன்எஸ் சேகர் வழங்கி வருகிறார்.


விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் இஎன்எஸ் சேகர், கீழ கூடலூர் மற்றும் ஈச்சேரி ஊராட்சி மன்ற தலைவராகவும், அவரது சகோதரர் ஏழிலரசன் மற்றும் அவரது அண்ணி பூங்கொடி ஆகியோரை சுயேட்சை கவுன்சிலராகவும் முன்னிறுத்தி, தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர். இதனால் தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதேபோல் கோணேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு  மாதம் தோறும் 25 கிலோ அரிசி, 20 கிலோ மதிப்பிலான காய்கறிகளை வழங்கி வருகிறார். மேலும் அவரது ஊராட்சியில் இளைஞர்கள் விவசாயம் செய்தால் அவர்களுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி வருகிறார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில்...” என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருப்பேன். எப்பொழுதுமே அவர்களுக்கு நன்றி உடனும், விசுவாசம் உடனும் இருப்பதுடன், அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை சொந்த செலவிலாவது செய்து தருவேன்” என தெரிவித்தார், மேலும் விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு அணைத்து உதவிகளையும் செய்து தருவேன் எனவும் படிக்க முடியாத மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ், கவுன்சிலர் எழிலரசன், வழக்கறிஞர் முரளி,  மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.