பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஓரிக்கை குருவிமலை பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான " நரேன் ஃபயர் ஒர்க்ஸ்" என்ற பெயரில் பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் மற்றும் பட்டாசுகள் பாதுகாத்து வைக்கப்படும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நாட்டு பட்டாசுகள் என சொல்லக்கூடிய, குறிப்பாக திருவிழா காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிர்வெட்டுகள், வண்ண பட்டாசுகள், வானம் , சரம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.



 

நடுக்கத்தை உணர்ந்த மக்கள்

 

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில், திடீரென பயங்கர சத்தத்துடன் , பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலக்கூறுகள் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதும் பரவி பட்டாசு ஆலை பகுதியில் செயல்பட்டு வந்த  மற்ற பகுதிகளுக்கும் பரவியது , இதனை தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலை செயல்பட்டு வந்த இடத்திலிருந்து 4 கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. அப்பொழுது, அந்தப் பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 27 பேர் தீ விபத்தில் சிக்கி தவித்தனர். பயங்கர சத்தத்துடன் நடைபெற்ற இந்த விபத்தில், காரணமாக சுற்று வட்டாரத்தில் இருந்த 5 கிலோமீட்டர் வரை அதிர்வு ஏற்பட்டு , தொடர்ந்து புகை மூட்டமாக அந்த பகுதி காட்சியளிப்பது . அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதை பார்த்தவுடன், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைக்கும் வாகனங்களை பயன்படுத்தி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் கட்டிட இடுப்பாடுகள் மற்றும் தீயில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


உயிரிழந்தவர்கள் பட்டியல்

 

பூபதி வயது 53

விஜயா வயது 38

முருகன் வயது 50

தேவி வயது 32

சுதர்சன் வயது 31 (தொழிற்சாலை உரிமையாளரின் தங்கை மகன் மேலாளராக பணியாற்றி வருகிறார்) .

சசிகலா வயது 45 (செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்)

கங்காதரன் வயது 55

கௌதம் வயது 15

கோடீஸ்வரி வயது 48

 

 காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல்

 

குமுதா வயது 35

காளியம்மாள் வயது 35

சாந்தி வயது 45

மாதவி வயது 40

உமா வயது 35

சாரதா வயது 38

சரளா வயது 32

மணிகண்டன் வயது 29

லோகநாதன் வயது 38

லட்சுமி வயது 40

 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல்

 

உண்ணாமலை வயது 48

கஜேந்திரன் வயது 50

ரவி வயது 49

ஜெகதீசன் வயது 38

சாவித்திரி வயது 54

ரவிக்குமார் வயது 27

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒருவர் பட்டியல்

 

மலர் வயது 40

அமல் வயது 45

 

 

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 

இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வெடி விபத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பான சிகிச்சை தரவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.