10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதிக தேர்ச்சி பெற்று முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 


பெரம்பலூர் 97.67% பெற்று முதல் இடத்திலும் 


சிவகங்கை 97.53% பெற்று இரண்டாம் இடத்தையும் 


விருதுநகர் 96.22% பெற்று மூன்றாம் இடத்தையும் 


கன்னியாகுமரி 95.99% பெற்று நான்காம் இடத்தையும் 


தூத்துக்குடி 95.58 % பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது .


6 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்த மாவட்டங்கள்


6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%)  ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. 


மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம்


தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவகள் என  மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம்


சாதனை படைத்த அரசு பள்ளிகள்  


அரசுப் பள்ளிகள் - 87.45%


அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.24%


தனியார் சுய நிதி பள்ளிகள் - 97.38%


பெண்கள் பள்ளிகள் - 94.38%


ஆண்கள் பள்ளிகள் - 83.25%


10-ஆம் வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்


தேர்வு முடிவு வருவதற்கு முன்பு மாணாக்கர்களுக்கு தேர்ச்சி பற்றிய பயமும் , மதிப்பெண் பற்றிய பயமும் வரும். இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு என்ன படிக்கலாம்? நாம் எடுத்த மதிப்பெண்ணுக்கு எந்த பள்ளியில் என்ன பாடப்பிரிவு எடுக்கலாம் என்ற குழப்பம் ஏற்படும்.  பெற்றோர், உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் அவரவர் ஒரு கருத்தை கூறுவார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை கூறுவதால் இறுதில் இதில் எதை படித்ததால் சிறந்தது? எது நமக்கு சரியாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்படும்.


இதற்கெல்லாம் தீர்வு அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு புதிய வழிகாட்டியாக முன்நின்றுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட குறிப்பில், “ 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு, என்ன பாடம் தேர்ந்தெடுக்கலாம்? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் 14417 உதவி மையம் பதிலளிக்கிறது” என தெரிவித்துள்ளது. 


எனவே மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் பெறலாம்.