தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்ததால் கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மூன்றாவது வகையில் இருந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று (5-ஆம் தேதி) முதல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க உத்தரவிடப்பட்டது. அனைத்து கோயில்களும் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படும். ஆனால் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பள்ளது.


 




 


தமிழக அரசின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டம் கோவில் நகரமான திருவண்ணாமலை உள்ள உலகப் பிரசித்தி பெற்றதும், பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்கும் திருக்கோவில்,வருடத்தில் ஒருமுறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பத்து நாட்கள் தீப திருவிழா அண்ணாமலையார் திருக்கோவில், கி. மு 10ஆம் நூற்றாண்டு சோழர்கள், பல்லவர்களலால் கட்டப்பட்ட பழமையான கிரிவலம் பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் ஆதி அண்ணாமலையார் கோயில் மற்றும் படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டு ரங்கன் திருக்கோயில், தேவிகாபுரம் பெரியநாயகி திருக்கோயில் போன்றவை புகழ்பெற்ற திருத்தலங்கள் ஆகும். 


இதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதி திருவரங்கம் , திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்கள், இன்று காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.


 




திருக்கோவில்கள் 6 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் முடித்து 7.30 மணி அளவில்தான் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி பக்தர்களின் கைகளை கழுவ கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு , உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கோயில் திறக்கப்பட்ட நிலையில் பக்தர் ஒருவர் அங்கப்ரதட்சணம் செய்தார் 




மேலும் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.திருவண்ணாமலை மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் சுற்ற அனுமதிக்க கோரிக்கை வைத்துள்ளனர் . 2 மாதங்களுக்கு பிறகு திருக்கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்