திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சாலையில் அன்பழகனுக்கு சொந்தமான 15 அடி ஆழமுள்ள விவசாய கிணறு அமைத்துள்ளது கிணற்றையொட்டி  ஏராளமான வாகனங்கள் செல்வது வழக்கம். கட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூலையில்  பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், முனிரத்தினம், குப்புசாமி, தம்பிதுரை, பிரதாப், ஆகியோர் டிராக்டரில் செங்கல் ஏற்ற செல்வதும் வழக்கம். அப்போது பழனி என்பவருக்கு வீடு கட்டுவதற்காக கட்டமடவு பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு செங்கல் ஏற்ற வழக்கம்போல் பள்ளத்தூர் பகுதி வழியாக சென்றபோது கிணற்றிருக்கு சுத்தி பாதுகாப்பான வளையங்கள் இல்லாததால், கிணற்றையொட்டி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலைதடுமாறியுள்ளது. எனவே மின்னல் வேகத்தில் கிணற்றில் மூழ்கியது ட்ராக்டர். டிராக்டரில் சென்ற முனிரத்தினம் ,குப்புசாமி தம்பிதுரை மற்றும் பிரதாப், விக்னேஷ் ஆகிய 5 பேரும் சென்ற ட்ராக்டர் தலைகீழாக அதிபயங்கர சத்தத்துடன் கவிழ்ந்துள்ளது.



 


அதன் பின்னர் அங்குள்ள பொது மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அதன் பின்னர் டிராக்டரில் பயணித்த முனிரத்தினம் , குப்புசாமி, தம்பிதுரை, பிரதாப் ஆகிய நான்கு பேரையும் .பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினர்  கிணற்றிலிருந்து கயிறின் மூலமாக மேலே  கொண்டுவந்தனர். நான்கு பேருக்கு படுகாயம். உடன் பயணித்த விக்னேஷ் டிராக்டரின் அடியில் சிக்கியதால் கிணற்றில் மூழ்கியநிலையில் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினர் பொக்லைன் வாகன உதவியுடன் டிராக்டர் மற்றும் விக்னேஷின் உடலை மீட்டு வெளியில் எடுத்தனர். விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மேல்செங்கம் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.