தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த வாரம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 22 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பு 24 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிய நிலையில், இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,971 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துளளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 229 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 20 ஆயிரத்து 680 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்கள் 33 ஆயிரத்து 646 ஆகும். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் தமிழ்நாட்டில் 12 லட்சத்து 90 ஆயிரத்து 999 ஆகும். பெண்கள் மட்டும் 9 லட்சத்து 4 ஆயிரத்து 365 ஆகும். திருநர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 12 ஆயிரத்து 513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பெண்கள் 10 ஆயிரத்து 138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து 33 ஆயிரத்து 646 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 306 ஆக உயர்ந்துள்ளது.


இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 463 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 190 பேர் தனியார் மருத்துவமனையிலும், 273 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்தம் 7 ஆயிரத்து 362 நபர்கள் கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 26 ஆயிரத்து 128 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 102 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.




தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது  மக்கள் மத்தியில் ஆறுதலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பது கொரோனா பாதிப்பு நிலவரங்களின் அடிப்படையிலே அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.