திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்தனர் தங்கராஜ் என்பவர் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தர் அப்போது  பேருந்தில் பள்ளி சீருடையில் 12 வயது மதிக்கத்தக்க மாணவன் மற்றும் அவனுடன் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர்.


அவர்கள் நடத்துனரிடம் கோயம்பேடு செல்ல மூன்று பயண சீட்டு வேண்டும் என கேட்டு 500 ரூபாயை நீட்டியுள்ளனர். அப்போது தான் அந்த சிறுவர்கள் மட்டும் தனியாக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பதை உறுதிபடுத்திக் கொண்ட நடத்துனர், சென்னைக்கு எங்கு எதற்காக செல்கிறீர்கள் என கேட்டதற்கு அவர்கள் கூறியபதிலில் இருந்து மூவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு செல்வதை உறுதி செய்துகொண்ட நடத்தனர். அவர்களுக்கு பயணச்சீட்டு கொடுக்காமல், அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்துள்ளார்.



பேருந்து காஞ்சிபுரம் சாலையில் தூசி அருகே வந்ததும் பேருந்தை தூசிகாவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். பேருந்தை காவல் நிலையம் எதிரே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு நடத்துனர் தங்கராஜ் மற்றும் ஓட்டுனர் முரளியும் அந்த மூன்று சிறுவர்களையும் காவல் நிலையத்தில் காவலர்களிடம் சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் வந்துள்ளதாக கூறி ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர். அதனையடுத்து சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், மூவரும் செய்யாறு அடுத்த பல்லி கிராமத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரது மகன் என்பது அவர் 7 ஆம் படித்து வருவதும், இவருடன் வந்தவரகள் அவனது தங்கை 9 வயதுடைய  நான்காம் வகுப்பு மாணவி, மற்றும் அவர்களின் எதிர்வீட்டில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் வயது 9 நான்காம் வகுப்பு மாணவி என்பதும் இவர்கள் மூவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதும், மூவரும் இன்று வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்தவர்கள் பள்ளியில் புத்தக பையை வைத்தவிட்டு பல்லி கிராமத்திலிருந்து பேருந்தில் செய்யாறுக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல பேருந்தில் செய்ததும் தெரியவந்தது. 



அதனையடுத்து சிறுவர்களிடமே தங்களின் பெற்றோர்களின் செல்போண் எண்ணை கேட்டு அவர்களிடம் தொடர்பு கொண்டு தூசி காவல் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். டிக்கெட் கலெக்சன் வந்தால் போதும் யார் எங்கு சென்றால் நமக்கென்ன என்று சிறுவர்களிடம் டிக்கெட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டு அவர்களை சென்னையில் கொண்டுபோய் இறக்கிவிடாமல் பெற்றோரோ. பாதுகாப்பாலரோ இல்லாமல் சிறுவர்கள் தனியாக பயணம் செய்வதை கவணித்து பணிக்கிடையே தாயுள்ளத்துடன் சிறுவர்களை பாதுகாப்பாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து தங்களின் பயணத்தை தொடர்ந்த ஓட்டுனரையும், நடத்தனரையும் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.