பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2.5 டன் கெட்டுப்போன வெல்லம் - திரும்பி எடுத்துச்செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்

’’சுமார் 2.5 டன் வெல்லம் தரமற்று இருந்ததாகவும், அவற்றை அனுப்பிய நிறுவனமே அந்த வெல்லத்தை பெற்றுக்கொண்டு மாற்று வெல்லத்தினை அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்’’

Continues below advertisement

பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அரிசி பெறும் அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு, பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் கடைகள் மூலமமாக வழங்கப்பட்டு வருகின்றன.   இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1627 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்பிள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

Continues below advertisement

இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்புகளில் வழங்கப்படும் எண்ணெய், வெல்லம் உள்ளிட்ட சில பொருட்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக குடும்ப அட்டை தாரர்களிடம் இருந்து  தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். இந்த ஆய்வில் சுமார் 2.5 டன் தரமற்ற வெல்லம் பொது மக்களுக்கு வழங்கப்பட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் தரமான பொருட்களை அளிக்கவும், அளித்த பொருட்களில் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் குறைவான பொருட்கள் இருந்தால் அவைற்றை பெற்றுக்கொண்டு மாற்று பொருட்களை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தேனியில் 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது பொது மக்களிடம் இருந்து வந்த புகாரினையடுத்து தான் நேரில் ஆய்வு செய்ததாகவும், பொருட்கள் வழங்கப்படும் பைகள் இல்லாத நிலையில் பொருட்கள் வழங்கும் பணிகளில் சிறிது தொய்வு இருந்ததாகவும், தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.5 டன் வெல்லம் தரமற்று இருந்ததாகவும், அவற்றை அனுப்பிய நிறுவனமே அந்த வெல்லத்தை பெற்றுக்கொண்டு மாற்று வெல்லத்தினை அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

Watch Video: உங்களுக்கு தானே ஓட்டு போட்டோம் எங்களை வெளியேற்றுவது நியாயமா? - போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்

 

Continues below advertisement