கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் சாகசம் செய்து ஆபத்தாக பயணம் செய்த மாணவியின் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இந்த நிலையில் வீடியோவில் பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்திற்கு வெளிப்புறம் நடுவில் இருந்த கம்பியை பிடித்த மாதிரி பேருந்தில் தொங்கிக்கொண்டே மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ பரவி வருகிறது




வைரலான அந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரித்ததில், அந்த பேருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் திருவள்ளூரில் இருந்து மெய்யூர் வரை செல்லும் அரசுப்பேருந்து என்று கண்டறியப்பட்டது. மேலும், மெய்யூர் பகுதியில் தான் மாணவர் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் ஆபத்தான பயணம் செய்த மாணவரின் தந்தையையும், தாயையும் தனியார் திருமண மண்டபம் ஒன்றிற்கு அழைத்தனர்.






அங்கே பேருந்தில் ஆபத்தான பயணம் செய்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது என்றும், மாணவரின் எதிர்கால நலன் கருதி இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். மேலும், மாணவரின் பெற்றோர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் சறுக்கிக் கொண்டே சென்ற வீடியோ வைரலானதும், பின்னர் அந்த மாணவியையும், அவருடன் வந்த மாணவரையும் திருவள்ளூர் எஸ்.பி. அழைத்து எச்சரித்து கண்டித்தும், அறிவுரை கூறியும் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.




மேலும், பேருந்தில் மாணவர் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக விளக்கமளித்துள்ள திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர், நாங்கள் மாணவர்களுக்கு பலமுறை மிகவும் அன்பாக அறிவுரை கூறினோம். அவர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு இந்த தகவல் பொருத்தமாக இருக்கும். மாணவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண