தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,


“பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றம் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க 6.12.2021 முதல் 6.1.2022 வரை ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும். இதில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



  • கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைப்பது, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

  • கஞ்சா மற்றும் குட்கா கடத்தல்-பதுக்கல்-விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





  • கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோகர் மூலம் அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.

  • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, ரகசியத் தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

  • ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் விசேஷ கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

  • ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.





  • இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கையை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இந்தப் பணியை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குனர், சட்டம் ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்புதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


மேலும் படிக்க : Cho Ramaswamy: “ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” - அரசியலில் யாரையும் விட்டுவைக்காத சோ ராமசாமி!


மேலும் படிக்க :‛தவறான புரிதல்... கமலிடம் எந்த விளக்கமும் கேட்கத்தேவையில்லை’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்!



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண