தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தினபூமி பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே பயங்கர விபத்து:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை நோக்கிச் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
அதில், காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தின பூமி பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் மரணம் அடைந்தார். இவருடன் வந்த அவரது மகன் ரமேஷ் படுகாயங்கள் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள், விபத்தில் காயமடைந்த ரமேஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினபூமி உரிமையாளர் மரணம்:
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் அதிகாலை திருச்சி - சென்னை GST சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேட்டத்தூர் அருகே வந்த போது வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிக்க: வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?