சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 


அந்தவகையில், இன்றைய சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் முடங்கும் நிலையில் உள்ளதாக கூறினார்.


இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை என்றும் ஒரு இடத்தில் கூட இதுவரை மூடப்படவில்லை என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். அம்மா உணவகம் குறித்து தினமும் அரசியலாக்கப்படுவதாகவும் எஸ்.பி.வேலுமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.


மேலும், ஒரு உணவகத்தில் மாதத்துக்கு 4000 ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.6,000  சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இதனால் சில சீர்த்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை அரசியலாக்க வேண்டாம்", எனக் கூறினார்.  இதனை தொடர்ந்து பேசிய  அவர், ”அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உனவகங்களுக்கு இந்த ஆண்டு ரூ.129 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் 15 கோடி தான் வருகிறது", எனக் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 


பேரவையில் அமைச்சரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அம்மா உணவகங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வருகிறது. உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்காததால் தரமான உணவு வழங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர்" என குற்றம்சாட்டினார்.


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எந்த அம்மா உணவகம் என ஆதரத்தோடு குற்றச்சாட்டு சொன்னால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறே நடக்கவில்லை என கூறவில்லை. எங்கே நடக்கிறது என ஆதாரத்தோடு கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்", என கூறினார். 


இதனை அடுத்து, அம்மா உணவகங்கள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதனை ஆய்வு செய்ய வேண்டும்", என எடப்பாடி பழனிசாமி கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  "வெளியில் வரும் செய்திகள் ஆதாரத்தோடு இருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறினார். 




மேலும் படிக்க


CM Stalin : பெரியாரை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!